17/Feb/2021 08:15:21
ஈரோடு பிப்: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் செய்தியாளா்கள் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அண்மை காலமாக இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பிரச்னை நடக்கப்போவதாவும் தமிழகத்தில் உளவுத்துறை சாியாக செயல்பட்டு கண்காணித்து தீவிரவாதத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
மேலும் தில்லியில் நடந்த இஸ்லாமிய பொதுக்கூட்டம் போல் தற்போது தமிழகத்தில் மதுரையில் நடக்க இருக்கும் இஸ்லாமிய பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது. வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க இந்து முன்னணி வேலை செய்யும் என்றும் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி போன்றவர்கள் கைகளில் முருகர், வேல், பிள்ளையார் போன்றவற்றை வைத்து கொண்டு மக்களை திமுகவின் பக்கம் திசை திருப்ப முயலுவ தாகவும் தெரிவித்தார். சட்ட விரோதமாக தேவாலயங்கள் கட்டுவதை அரசு தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.