logo

வரதட்சணை புகார்- கணவர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

12/Oct/2020 10:30:23

கோபிச்செட்டிபாளையம் அருகே வரதட்சணை கொடுமை செய்வதாக பெண் அளித்த புகாரின்பேரில் கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் அண்ணாநகரைச்சோ்ந்த தீபா என்ற இளம்பெண்ணை பெருந்தலையூர் கவுண்டம்பாளையத்தைசோ்ந்த தீபாவின் கணவர் குணசேகரன் மாமியார் ஈஸ்வரி மற்றும் உறவினர்களான பழனிச்சாமி, சுதா, கோகிலா ஆகியோர் பைனான்ஸ் நடத்துவதற்காக பெற்றோரிடமிருந்து    ரூ.1 லட்சம் ரொக்கமும் 10 சவரன் தங்கநகையும் வாங்கிவரும் படி தீபாவை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக  கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் தீபா அளித்த  புகாரின்பேரில்  காவல்துறையினர் வரதட்சணைக்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

                                                                               


Top