29/Apr/2020 12:40:16
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உரிய கல்வித் தகுதி இன்றி மருத்துவம் பார்த்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கறம்பக்குடி செட்டித்தெரு முக்கம் பகுதியில் ரத்த பரிசோதனை நிலையம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து,கறம்பக்குடி போலீஸார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரத்த பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் கறம்பக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த எஸ்.அன்பழகன்(40) பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, போலீஸார் அன்பழகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.