11/Oct/2020 03:34:59
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், காடனேரியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அந்தோணிசாமி(38) .இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர், காடனேரியிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு புதுக்கோட்டை வழியாக கந்தர்வகோட்டையைக் கடந்து காடவராயன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம்.
இதில் பலத்த காயமடைந்த அந்தோணிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விபத்துக்குக் காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.