logo
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்: இரண்டாவது நாளாக ஈரோட்டில் கனிமொழி பிரசாரம்

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்: இரண்டாவது நாளாக ஈரோட்டில் கனிமொழி பிரசாரம்

01/Dec/2020 10:53:07

ஈரோடு: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக சார்பில் 4 நாட்கள் பிரச்சார பயணத்தை திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற குழுவின் துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி.ஈரோட்டில் தொடங்கியுள்ளார்.  2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தனது பிரசார பயணத்தை தொடங்கினார்.வில்லரசம்பட்டியில் தங்கி உள்ள .திருநங்கைகளை சந்தித்துப் பேசினார். 

 அப்போது, திருநங்கைகள் தங்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், படித்த திருநங்கைகளுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும், தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நோயற்ற மற்றும் வயதான திருநங்கைகளுக்கு இலவச மருத்துவம் செய்து கொடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழி எம்.பி.யிடம் கொடுத்தனர்.

 பின்னர் நெசவாளர்களை சந்தித்துசிறிது நேரம் பேசினார்.  நெசவாளர்கள் அவரிடம் சில கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதைத் தொடர்ந்து, ஈரோடு முனிசிபல் காலையில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கும்   அதைத் தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் உள்ள காமராஜர் மற்றும் ஈ .வி .கே .சம்பத் ஆகியோர் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அதைத் தொடர்ந்து ஸ்டோனி பிரிட்ஜ் அருகே ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் முத்துசாமி தலைமையில் கனிமொழி எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து மணல் மேட்டில் உள்ள தி.மு.க கட்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுடன கனிமொழி எம்.பி. கலந்துரையாடினார். தொடர்ந்து காளைமாடு சிலை, சிமினி ஹோட்டல் அருகே ஆட்டோ டிரைவர்களை சந்தித்துப் பேசினார். 

குயவன்திட்டு  பகுதியில் உள்ள சேரி மக்களை சந்தித்து பேசினார். பின்னர் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள பெரியார்- அண்ணா நினைவகத்திற்கு  சென்று பெரியார் ,அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து சூளை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து பெருமாள் மலைப்பகுதியில் மக்களை சந்தித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து காளிங்கராயன் பாளையம் பகுதியில் மக்களை சந்தித்து பேசினார்.


Top