28/Aug/2021 01:39:02
ஈரோடு, ஆக: தமிழ் புலிகள் கட்சி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், மேற்கு மாவட்ட செயலாளர் சுக. திருவல்லவன் ஆகியோர் தலைமையில் ஈரோடு காந்திஜி ஈரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய குடியரசுத் தலைவருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இந்திய குடியரசு தலைவருக்கு தபால் அனுப்பி வைத்தனர். பொதுச்செயலாளர் தேசிங்கு, மாநகரச் செயலாளர் ருத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.