logo
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

25/Aug/2021 09:47:56

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் மாலை லேசான சாரலுடன்  பெய்யத் துவங்கிய மழை  பின்னர் கன மழையாக மாறியது.

இதனால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதோடு அப்பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவானது. காலை முதல் வெப்பம் வாட்டி வந்த நிலையில் மாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Top