logo
பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் சீர் வரிசை சுமந்து சென்ற தாய்மாமன்...!

பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் சீர் வரிசை சுமந்து சென்ற தாய்மாமன்...!

04/Mar/2021 10:42:47

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும்  தங்கை மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் உறவினர்கள் புடை சூழ  தாய்மாமன் சீர்வரிசை சுமந்து  சென்று அனைவரையும் அசத்தியுள்ளார்.


தமிழகத்தில் சகோதரிகளானஅக்காஅல்லது தங்கை மகள்களுக்கு தாய் மாமன் சீர் செய்வது என்பது மிகப்பெரிய மரபாகக் கருத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேஉள்ளகாளியப்பம்பாளையம் பகுதியைசேர்ந்தசிவக்குமார் - பூங்கொடிஆகியதம்பதியரின் மகள் ரிதன்யாவின் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது.


 அதன் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் நாய்க்கன்காடுபகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்ற  விழாவிற்கு திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்துள்ள டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த பூங்கொடியின் அண்ணனும் ரிதன்யாவின் தாய்மாமனுமான யோகேஸ்வரன்-பாரதி தம்பதியர்  தாய் மாமன் சீர் வரிசையை பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் திருமணமண்டபம்  வரைகொண்டு வந்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.  மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் மாட்டு வண்டியிலேயேஅழைத்து வந்துசுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.


 தாய்மான் சீரைமாட்டுவண்டியில் கொண்டுவந்ததுமட்டுமின்றிஉறவினர்களையும் மாட்டுவண்டியில் அழைத்து வந்ததை கோபிசெட்டிபாளைம் நகர் பகுதி வாசிகள் ஆச்சரியத்துடனும் அதிசயத்துடனும் பார்த்து ரசித்தனர். தாய் மாமன் சீர் கொண்டு வருவ துகாலங்காலமாகந டைமுறையில் உள்ள வழக்கம் என்பதால் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் தான் கொண்டு வரவேண்டும்  என்ற நோக்கில் சீர்வரிசை கொண்டு வந்துள்ளதாகவும் தற்போது காலமாற்றத்தால்  ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளதை அனைவரும் உணர்ந்து இயற்கையை நேசிக்க  வேண்டும் எனஉறவினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தாய்மான் சீர் வரிசையை மாட்டுவண்டியில் கொண்டு வந்ததாக தாய்மாமன் யோகேஸ்வரன் தெரிவித்தனர்.

Top