05/Oct/2020 03:26:02
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலைக்கு
முயன்ற திருமலை
நம்பி கூறுகையில்,
தேனீர் குளம்
பகுதியில் தனக்குச்
சொந்தமான நிலம்
உள்ளது. அதனை
தனது உறவினர்கள்
சேர்ந்து விற்பனை
செய்ய முயற்சிக்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்தி
எனது நிலத்தைத
மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரியே தற்கொலைக்கு முயன்றேன்
என்றார். சில
ஆண்டுகளுக்கு முன் நெல்லை ஆட்சியரகத்தில் தீவைத்து
ஒரு குடும்பத்தினர்
தற்கொலை செய்து
கொண்ட சம்பவம்
தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், தற்போது
தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் ஆட்சியர்
அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.