29/Dec/2020 07:33:36
புதுக்கோட்டை மாவட்டம்,
வடகாட்டில் ரேசன் கடையில் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
வடகாட்டில் உள்ள அரசின் நியாய விலைக்கடையில், மண்ணெண்ணெய்
உள்ளிட்ட அத்தியாவசியப்பொருள்கள் வாங்க பொதுமக்கள் காலையில் இருந்து காத்திருந்துள்ளனர்.
பயோமெட்ரிக் இயந்திரம் பழுது எனக்கூறி பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்கப்படவில்லை
எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் வடகாடு பெரியகடைவீதியில் சாலை மறியலில்
ஈடுபட்டனர். தொடர்ந்து, வடகாடு கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர், போலீஸார் உரிய நடவடிக்கை
எடுப்பதாக உறுதியளித்தைத்தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இந்த
மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.