logo
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில்  கலைஞர் கருணாநிதி பெயரில் ஆய்வு இருக்கை: எம்.சின்னத்துரை எம்எல்ஏ வலியுறுத்தல்

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் ஆய்வு இருக்கை: எம்.சின்னத்துரை எம்எல்ஏ வலியுறுத்தல்

19/Aug/2021 10:49:15

புதுக்கோட்டை, ஆக:  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தமிழ் பற்றைப் போற்றும் வகையில் தனித்த ஆய்வு இருக்கையை ஏற்படுத்த வேண்டுமென கந்தர்வகேரட்டை தொகுதி சட்டப்போவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது: பல மொழி களுக்குத் தாய், இலக்கிய, இலக்கண வளம் என உலகின் தொண்மையான மொழி தமிழ். தமிழின் பெருமையை, தொண்மையை உலகறியச் செய்வதற்காக அயறாது உழைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.

அவரது தமிழ்ப் பணிகளைப் போற்றும் வகையிலும், அவரது வெளியீடுகளை ஆய்வு செய்வதற்கும் ஏற்ற வகையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  தனித்த ஒரு ஆய்வு இருக்கையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென  கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.


Top