logo
கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

21/Dec/2020 05:43:51

 ஈரோடு, டிச: ஈரோடு  ஆட்சியர்  அலுவலகத்தில், கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஈ.வி.கே.சண்முகம் மனு வழங்கினார். பின், அவர் கூறியதாவது:

தமிழகத்தில், 65,000 துாய்மை காவலர்கள் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள் தினக்கூலிகளாக பணி செய்கின்றனர். இவர்களுக்கு, ரூ.2,600 -இல் இருந்து, ரூ. 3,600 ஊதியத்தை உயர்த்தி, முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதனை அமல்படுத்தாமல், பழைய சம்பளத்தையே வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது, உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கலாம் என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த, 5 -இல் அரசாணை வெளியிடப்பட்டும், கடந்த மாத ஊதியத்தைக்கூட பழைய ஊதியமாகவே வழங்கி உள்ளனர். புதிய ஊதியம் வழங்குவதுடன், கடந்த ஏப்., 1 முதல் நிலுவைத்தொகையையும் வழங்க வேண்டும்.

இதுபற்றி,  ஆட்சியர்  அலுவலகத்தில் மனு வழங்கி, முறையிட்டால், இதுவரை, நிர்வாக ரீதியாக எங்களுக்கு உத்தரவும், நிதியும் வரவில்லை. அவை வந்த பின்னரே, புதிய ஊதியத்தொகை வழங்கப்படும், என்கின்றனர். இதுபற்றி ஆட்சியர் , அரசுடன் பேசி விரைவில் தீர்வு காண்பதுடன், அவர்களது நிலுவை  ஊதியத்தையும் பெற்றுத்தர வேண்டும், என்றார். 

Top