logo
ஈரோடு மாநகரில் 15 டன் அளவில் குவிந்த  பட்டாசு கழிவுகளை அகற்ற நடவடிக்கை: மாகராட்சி  ஆணையர்  மா. இளங்கோவன் தகவல்

ஈரோடு மாநகரில் 15 டன் அளவில் குவிந்த பட்டாசு கழிவுகளை அகற்ற நடவடிக்கை: மாகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தகவல்

18/Nov/2020 10:02:42

ஈரோடு: ஈரோடு மாநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்  தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால், ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் எங்கு பார்த்தாலும் வெடித்த பட்டாசு, காகிதம், அட்டை பெட்டி கழிவுகள் என  குவியல் குவியலாக கிடக்கிறது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

 அதன்படி, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் பட்டாசு கழிவுகளை அகற்றி வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் பட்டாசு கழிவுகள் சுமார் 15 டன் அளவு சேர்ந்துள்ளது. தீபாவளி விடுமுறை முடித்து கடந்த திங்கள்கிழமை முதல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இந்த பட்டாசு கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விடும் இந்த பணிகளில் கூடுதலாக லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, குப்பைகளை அப்புறப்படுத்தப்படும்  பணிகள் முழு வீச்சில்  நடைபெற்று வருகிறது என்றார். 


Top