logo
ஈரோடு- மொடக்குறிச்சி பகுதியில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு- மொடக்குறிச்சி பகுதியில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

23/Jun/2021 08:52:35

ஈரோடு, ஜூன்: ஈரோடு- மொடக்குறிச்சி பகுதியில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. காலை தொடங்கி மாலை வரை வெயில் சுட்டெரித்ததால்  பொதுமக்கள்  அவதிப்பட்டு  வந்தனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வீடுகளில் புழுக்கத்தால் பெரியவர்கள், சிறியவர்கள் சிரமப்பட்டு  வந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு 10.40 மணிக்கு மேல் திடீரென இடி, மின்னலுடன்  கூடிய மழை பெய்ய தொடங்கியது.

நேரம் செல்ல செல்ல மழை வலுத்தது. இதைப்போல் மொடக்குறிச்சி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

Top