09/Aug/2021 02:56:30
புதுக்கோட்டை, ஆக: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கீரனூர் கிராமத்தை சேர்ந்த க.சரவணன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மனநல காப்பகத்தில் ஒரு ஆண்டுக்கு முன் சேர்க்கப்பட்டார். ஒருங்கிணைந்த மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.
திருமயம் ஒன்றியம், ஊனையூரில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில், குணமடைந்துள்ள சரவணன் என்பவரை அவரது அண்ணன் க.ரெங்கநாதன் மற்றும் குடும்பத்தினருடன் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில் (09.08.2021) நடைபெற்ற நிகழ்வில் மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழை அமைச்சர்கள் வழங்கி அனுப்பி வைத்தனர்.