10/Nov/2020 07:05:13
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் அh;பன் மெகா பட்டாசு கடையின் தீபாவளி விற்பனையினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலையில் நடைபெற்றது.
பின்னா; மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியதாவது:தீபாவளி திருநாளை முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் அh;பன் கூட்டுறவு பண்டக சாலையின் சாh;பில் மெகா பட்டாசு கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அர்பன் பண்டகசாலை மற்றும் சின்னப்பா பூங்கா அருகில் உள்ள மெகா பட்டாசு கடையின் மூலம் ரூ.70 லட்சத்திற்கு பட்டாசுகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பட்டாசுகள் வாங்குவதற்கு வரும் பொழுது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் சமூக இடைவெளியை பின்பற்றவும், கைகளை கழுவுதற்கும், கிருமி நாசினி போன்றவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டாசுக் கடை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.
எனவே பொது மக்கள் அர்பன் பட்டாசு கடைகளில் தரமான பட்டாசுகளை வாங்கி தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான தீபாவளியாக கொண்டாட வேண்டும். மேலும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்;.
இந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினா; பா.ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் த.ஜெயலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா; பெ.வே.சரவணன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா; எம்.உமாமகேஸ்வரி, துணைப் பதிவாளர்கள் ராமையா, அண்ணாத்துரை, பேக்கரி மகராஜ் அருண், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் வி.சி. ராமையா, முன்னாள் எம்எல்ஏ ஆர். நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.