04/Oct/2020 10:54:15
புதுக்கோட்டை மாவட்டம்,
ஆலங்குடியில் மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு கிராமத்தைச்
சேர்ந்தவர் வி.பாலசுப்பிரமணியன்(50). இவர், செப்.30-ம் தேதி ஆலங்குடி அரசமரம் பகுதியில்
உள்ள வங்கிக்கிளை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது,
மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன்
அளித்த புகாரைத்தொடர்ந்து, விசாரனை மேற்கொண்டு வந்த போலீஸார் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற
பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முத்தரசு மகன் வினோத்(24) என்பவரை
கைது செய்து விசாரித்து வருகின்றனர்.