03/Oct/2020 07:24:57
ஈரோடு: வடகிழக்கு பருவ மழை இடர்பாடுகளை எதிர்கொள்ள, தீயணைப்பு விரர்களை உற்சாகப்படுத்தவும், டி.ஜி.பி. சைலேந்திரபாபு 513 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டிஜிபி சைலேந்திரபாபு இன்று காலை கோவையில் இருந்து சென்னை வரை 513 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினார். கோவை, சத்தியமங்கலம், மேச்சேரி, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சென்று நாளை மாலை சென்னை பூந்தமல்லியில் சைக்கிள் பயணத்தை நிறைவு செய்கிறார்.
அவருடன் தீயணைப்பு வீரர்கள் 6 பேரும் சைக்கிள் பயணத்தில் இணைந்து செல்கின்றனர். செல்லும் வழியில் மொத்தம் 20 தீயணைப்பு நிலையங்களை ஆய்வு செய்கிறார். சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலகம் வந்த டிஜிபி சைலேந்திரபாபு, அங்கு வடகிழக்கு பருவமழை மீட்பு பணிக்கு தயார் நிலையில் உபகரணங்கள் போதுமானதாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார். அதன்பின், தீயணைப்பு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் வீரர்களை உற்சாகப்படுத்தவும், வேகமாக பணியாற்றவும், மீட்புப் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளனவா? வீரர்கள் தயார் நிலையில் உள்ளார்களா?என ஆய்வு மேற்கொண்டார். , அனைத்து வீரர்களும் தயார் நிலையில் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே வகையில் இந்த சைக்கிள் பயணத்தின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.