logo
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்தல்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்தல்

22/Dec/2020 10:43:07

ஈரோடு, டிச:ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டக்குழு கூட்டம் செல்வராஜன் தலைமையில் நடந்தது.

மாநில துணை செயலாளர் எம்.பி., சுப்பராயன், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, விவசாய சங்க மாவட்ட செயலாளர் துளசிமணி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் சின்னசாமி ஆகியோர் பேசினர்.

கேஸ் சிலிண்டருக்கான விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் சட்டம், மின் திருத்த மசோதா, தொழிலாளர் நலச்சட்ட தொகுப்பு போன்றவற்றை திரும்ப பெற வேண்டும்.

 தில்லியில் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.வரும் சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க., தலைமையிலான கூட்டணி வேட்பாளர் வெற்றிக்காக, பூத் கமிட்டி அமைத்து, தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Top