18/Jul/2021 11:47:43
புதுக்கோட்டை, ஜூலை, 18: அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் ... புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
நாட்டின் முன்னேற்றத்திற்கான அடிப்படை மகளிரின் முன்னேற்றம்தான் என்பதை உணர்ந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகளிரின் முன்னேற்றத்திற்கென பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கட்டுபாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில்; மகளிர் கட்டணமின்றி பயணம் செய்ய உத்தரவிட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். இத்திட்டம் மகளிர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறார். ஒரு புறம் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மறுபுறம் கோவிட் நிவாரணத்தொகை ரூ.4,000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை உடனடி நிவாரணமாகவும் பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து வழங்கப்பட்டது.
ஆட்சி பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு உதவிடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து கழக கட்டுபாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
மேலும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையினை ஏற்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் தினமும் சுமார் 60,000 மகளிர் பயணிக்கின்றனர்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 9 அரசுப் போக்குவரத்து பணிமனைகள் இயங்கி வருகிறது.