logo
 ஈரோட்டில் ரேஷன் கடைகளில்  2-ஆம் கட்ட நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருட்கள்:   எம் எல்ஏ- .திருமகன் ஈவெரா விநியோகம்

ஈரோட்டில் ரேஷன் கடைகளில் 2-ஆம் கட்ட நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருட்கள்: எம் எல்ஏ- .திருமகன் ஈவெரா விநியோகம்

15/Jun/2021 07:21:24

ஈரோடு, ஜூன்:ஈரோட்டில் ரேஷன் கடைகளில்  2-ஆம் கட்ட நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் விநியோகத்தை   எம் எல்ஏ - திருமகன் ஈவெரா தொடங்கி வைத்தார்.

தி.மு. தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களாக உள்ள பொதுமக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழக முதல்-அமைச்சராக மு..ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கடந்த மாதம் முற்கட்டமாக ரேஷன் கடைகள் மூலம் முதற்கட்டமாக கொரோனா நிவாரண தொகை ரூ.2ஆயிரம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கடந்த 3-ஆம் தேதி 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 2-ஆம் கட்ட கொரோனா நிவாரண தொகை ரூ.2ஆயிரம் ஆகியவை போன்றவற்றை வழங்கி துவக்கி வைத்தார்.

பிற மாவட்டங்களில் ஜுன் 15-ஆம் தேதி  முதல் நிவாரண தொகையும், மளிகை பொருட்கள் தொகுப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.    இதன்படி,  2-ஆம் கட்ட நிவாரண தொகை மற்றும் 14 வகையான பொருட்கள் பெற வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக டோக்கன் விநியோகம் செய்தனர்

அந்த டோக்கனில் நிவாரண தொகை வழங்கப்படும் தேதி, நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் கொரோனா நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

 வைராபாளையம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள ரேஷன் கடையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம் எல்ஏ -திருமகன் ஈவெரா   ரூ.2 ஆயிரம் தொகையும் 14 பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் கொண்ட  தொகுப்பையும்  பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து  நாராயண வலசு,குமலன் குட்டை,பிராமண பெரிய அக்ரஹாரம் ரேசன் கடைகளின் பொது மக்களுக்கும் வழங்கினார்     இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்டத்தலைவர் .பி.ரவி,ஈரோடு தெற்கு மாவட்டத்தலைவர் மக்கள் ஜி.ராஜன்,திமுக பகுதி செயலாளர் வி சி நடராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் .ஆர். ராஜேந்திரன் மாவட்ட துணைத்தலைவர்களான ராஜேஸ் ராஜப்பாமாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே. என். பாஷா உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Top