logo
நிவர்  புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 114 அலுவலர்கள் கொண்ட குழு அமைப்பு: ஷம்புகல்லோலிகர் தகவல்

நிவர் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 114 அலுவலர்கள் கொண்ட குழு அமைப்பு: ஷம்புகல்லோலிகர் தகவல்

25/Nov/2020 02:25:12

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்பு மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளா;ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 11 உயர் அலுவலர்கள் தலைமையில் 114 நபர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிக்கர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிக்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி முன்னிலையில் இன்று (25.11.2020) நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்துக்குப் பின்னர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில்   தமிழ்நாடு முதலமைச்சா; அவா;கள் அறிவுறுத்தலுக்கிணங்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் அரசின் பல்வேறு துறை அலுவலா;களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. துறை வாரியாக அரசு வழங்கியுள்ள புயல் பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்புடைய அலுவலர்கள் முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளாக 77 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கும் இடங்களில் உள்ள பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைத்து பராமரிக்க 371 பள்ளிக் கட்டடங்கள், 116 புயல் பாதுகாப்பு மையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் தங்கும்  பொது மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் போன்ற அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 11 உயர் அலுவலர்கள் தலைமையில் 114 பேர் கொண்ட குழுக்கள் அமைப்பு :

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 11 உயர் அலுவலர்கள் தலைமையில் 114 அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்றனர். இதே போன்று அனைத்து துணை ஆட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் தலைமையிலான அலுவலர்கள் தொடர்புடைய வட்டங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

மணல்மூட்டைகள் தயார்:

 நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3640 மணல் மூட்டைகள் மற்றும் 280 மரக்கட்டைகள் மழைக் காலங்களில் பயன்படுத்தப்படும் லாரிகள, புல்டோசர் .ஜேசிபி. ஜெனரேட்டர். பம்புசெட். ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் தீயணைப்பு துறை சார்பில் புயல் பேரிடர் மழைக்காலத்தில் பயன்படுத்தும் வகையில் அனைத்து கருவிகள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.புயலால் விளை நிலங்கள் மற்றும் பணப் பயிர்கள் சேதம் அடையாமல் பாதுகாக்க பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அனைத்து விவசாயிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரியத்துக்கென24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை:

 பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தடையின்றி மின்விநியோகம் வழங்கவும் மின்தடை தொடர்பான புகார்களை உடனுக்குடன் சீரமைக்க  மின்துறையின் சார்பில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் மின்விநியோகம் தொடா;பான விபரங்களுக்கு 04322 221853 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9445853891 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

 புயல் வெள்ள பாதிப்பு தகவல்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை:

 மேலும் பொது மக்கள் பேரிடர் தொடர்பான தகவல்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தை  1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322-222207 என்ற  தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றார் .ஷம்பு கல்லோலிக்கர். 

  இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன்  உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Top