logo
மேகக்கேதாட்டு அணை விவகாரம் : அரசியல் லாபத்திற்கான பாஜகவின் திட்டமிட்ட நாடகம் என  சிபிஎம் மாநிலச்செயலர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

மேகக்கேதாட்டு அணை விவகாரம் : அரசியல் லாபத்திற்கான பாஜகவின் திட்டமிட்ட நாடகம் என சிபிஎம் மாநிலச்செயலர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

10/Jul/2021 04:52:29

புதுக்கோட்டை, ஜூலை: மேகக்கேதாட்டு அணை விவகாரத்தை  அரசியல் லாபத்திற்காக பாஜகவின் திட்டமிட்டு நாடகம் ஆடுவதாக  சிபிஎம் மாநிலச்செயலர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட சிபிஎம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற  செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் அவர்பேசியது: 

தமிழ்நாட்டில் இருந்து கொங்கு நாட்டை தனியாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து பகிர்ந்து வருவது  ஆபத்தானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது, மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் கொள்ளை புறமாக பாஜக நுழைய நினைத்தால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.  இதனால் தான் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவியும் அண்ணாமலைக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டதாகவும் பேசப்படுகிறது.

இது மிகவும் ஆபத்தான போக்கு பாஜகவின் இத்தகைய முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழ் மொழி அடிப்படையில் உருவான நாட்டை பிரிப்பதற்கு தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இது ஆபத்தான திசையை நோக்கி இந்தியாவை பயணிக்க வைக்கும் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன்

அதிமுக அரசு பொதுமக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுபடுத்த போர்களத்தில் இருந்து போராடுவதை போல் தமிழக முதலமைச்சர் போராடி கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார், இதை போல் மூன்றாவது அலை வந்தால் அதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், 

கூட்டுறவு துறைக்கு அமித்ஷாவை அமைச்சராக நியமித்துள்ளனர் ஏற்கெனவே கூட்டுறவுத்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.எனவே மத்திய அரசு சார்பில் இதற்கென்று தனி துறை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை மாநில அரசின் கீழ் உள்ள கூட்டுறவுத்துறையை கபளீகரம் செய்வதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது

மேக்கேதாட்டு அணை விவகாரத்தை  பாஜக அரசு   எதற்காக  இவ்வளவு பூதாகரமாக பிரச்னை ஆக்குகிறது  என்பதை பார்க்க வேண்டும். இதனை வைத்து கர்நாடகாவில் அரசியல் ஆதாயம்  தேடுவதற்கு தான் பாஜக திட்டமிட்டு நாடகம் ஆடி வருகிறது.

தமிழகத்தில் பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒத்த கருத்தோடு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேண்டும். தமிழக அரசு 2-ஆவது அலை கொரோனா தாக்கத்தை சிறப்பாக கையாண்டு உள்ளது பாராட்டுக்குரியது.தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 40 ரூபாய் இடைத்தரகர்கள் வாங்குவது என்பது கடந்த ஆட்சியில் தொடர்ந்தது இந்த ஆட்சியிலும்  தொடர்கிறது உடனடியாக தமிழக முதல்வர் கவனம் செலுத்தி இடைத்தரகர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடப்பது என்பது பகல் கொள்ளை போல் உள்ளது

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதில் தவறில்லை அதற்காக கொங்குநாடு முழக்கம் என்பது மிகவும் ஆபத்தான செயல் அதற்கும் இதற்கும் ஒப்பிட முடியாது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு அதிகப்படியாக வருவதற்கு காரணம் மத்திய அரசுதான். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போன்று படிப்படியாக அனைத்தையும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இதில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது. கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு என்பது அவசியம் என்றார்  பாலகிருஷ்ணன். இதில் கந்தர்வகோட்டை எம்எவ்ஏ- சின்னத்துரை, மாவட்டச்செயலர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Top