logo
மன நலமையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பு

மன நலமையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பு

23/Jul/2021 12:47:40

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மன நலமையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட மனநல மையத்தில் தொடர் சிகிச்சையில் இருந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு சிகிச்சை முடிந்து,   குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டு, வாகனம் மூலம் வீட்டிற்கு  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வில், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் கே.ராமு, மாவட்ட மனநல மருத்துவர் ரெ.கார்த்திக்தெய்வநாயகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

Top