logo
வெள்ளித்திருப்பூரில் துரித உணவக  உரிமையாளர், மனைவியை தாக்கிய காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

வெள்ளித்திருப்பூரில் துரித உணவக உரிமையாளர், மனைவியை தாக்கிய காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

07/Mar/2021 10:44:24

ஈரோடு, மார்ச்:ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வெள்ளிதிருப்பூரில் துரித உணவக உரிமை.ாளர் மற்றும் அவரது மனைவியையும் தாக்கிய பறக்கும்படைப்பிரிவு  காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு  இட மாற்றம் செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர்-கொளத்தூர் சாலையில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்ரம் ( 30). இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விக்ரம் கடந்த நான்கு ஆண்டுகளாக   துரித  உணவகம் நடத்தி வருகிறார்.

வெள்ளித்திருப்பூர் காவல்நிலையத்தில்  காவலராக வேலை பார்த்து வருபவர் ராஜீவ்குமார் என்பவர்  தேர்தல் பறக்கும்படையிவ்  பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை  இரவு விக்ரம் நடத்தும்  உணவகத்துக்கு சென்று அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அதற்கு  விக்ரம் எதிர்ப்புத்தெரிவித்தாதாரம். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜீவ்குமார், கடையில் வைத்திருந்த  முட்டைகளை அடித்து உடைத்ததுடன்  விக்ரம் மற்றும் அவரது மனைவி ரேணுகா இருவரையும் ராஜீவ்குமார் தாக்கியுள்ளார்.  

இது குறித்து விக்ரம் அளித்த புகார் அளித்தார். மாவட்ட எஸ்.பி.தங்கதுரை விசாரணை நடத்த உத்தரவிட்டார்.அதன்பேரில் ஆய்வாளர்  செந்தில்,  உதவி ஆய்வாளர்  தியாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் ராஜீவ்குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். 


Top