logo
புதுக்கோட்டை வெங்கப்பன்ஊருணியை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏ- முத்துராஜா ஆய்வு

புதுக்கோட்டை வெங்கப்பன்ஊருணியை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏ- முத்துராஜா ஆய்வு

16/Jun/2021 10:34:16

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை பால்பண்ணை எதிரேஉள்ள வெங்கப்பன்ஊருணியை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏ- முத்துராஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் இந்த ஊருணி யை சுத்தப்படுத்தி, கரைகளில் நடைபயிற்சி பாதை அமைத்திட அத்துறை அதிகாரிகளுடன்  சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் எம்எல்ஏ- டாக்டர் வை.முத்துராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது புதுக்கோட்டை நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் . நைனாமுகமது, திமுக நிர்வாகிகள் எம்.எம். பாலு, கமல்சுதாகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Top