logo
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்துக்கு 2021 - 22 -ஆம் ஆண்டின் புதிய தலைவர் தேர்வு

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்துக்கு 2021 - 22 -ஆம் ஆண்டின் புதிய தலைவர் தேர்வு

19/Oct/2020 05:55:34

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக 2019 - 20 -ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா மற்றும் 2021 - 22 ஆம் ஆண்டிற்கான தலைவர் தேர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை குறிச்சிப்பட்டி எஸ். கே. கார்டனில் நடைபெற்றது.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் க.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 2021-22 -ஆம் ஆண்டிற்கான தலைவராக சங்கத்தின் பட்டய உறுப்பினரும் மாமலர் மருத்துவமனை நிறுவனருமான மருத்துவர் கு.மாரிமுத்து   ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சங்கத் தலைவர் அறிவித்தார்.

2019-20 ராயல் ஆண்டில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவராக க.தனகோபால், செயலாளராக பா.அசோகன், பொருளாளராக ஆரோக்கியசாமி குழுவினர் சிறப்பாக சங்கத்தை வழிநடத்தியும் சேவைத் திட்டங்களை செய்ததை பாராட்டும் விதமாக மக்கள் தொடர்பு , உறுப்பினர்கள் சேர்க்கை, மரக்கன்று நடுதல், ராயல் சாதனையாளர்கள் விருது, ராயல் சேவைத்திட்டங்கள், போலியோ விழிப்புணர்வு பேரணி.

ராயல் இன்டர்நேஷனல் சர்வீஸ், தசாவதாரம், இரத்தக் கொடை விருது, பவுண்டேசன் விருது, கொரோனா விழிப்புணர்வு சிறப்பு விருது அடங்கிய 11 விருதுகளை, 2019 -20 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்ட (3000) த்தின் ஆளுநர் மருத்துவர் ஏ.ஜமீர் பாட்ஷா சார்பாக, மேனாள் துணை ஆளுநர் எஸ்.பார்த்திபன், 2020-21 ஆம் ஆண்டின் மண்டல ஒருங்கிணைப் பாளர் பொறியாளர் வி.கர்ணன், துணை ஆளுநர் எம்.ஆர்.எம். முருகப்பன் ஆகியோர் விருதுகளை வழங்கி புதிய உறுப்பினர் ஒருவரை சங்கத்தில் இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

 நிகழ்ச்சியில், சங்கத்தின் பட்டயதலைவர் க.நைனா முகமது, பொறியாளர் என்.சுப்பிரமணியன், கால்நடை மருத்துவர் தட்சிணாமூர்த்தி, மேனாள் செயலாளர் ஆர். சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள் ரோட்டரி பிரார்த்தனை கே.என்.செல்வரத்தினம் வாசித்தார்       

சங்கத்தின்  ஆலோசகரும், மேனாள் சங்கத் தலைவருமான மாருதி மோகன்ராஜ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். சங்கத்தலைவர் வரவேற்றார் நிறைவாக செயலாளர் பி.செல்லத்துரை நன்றி கூறினார். கொரோனா தடுப்பு தொடர்பான அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Top