logo
நரிக்குறவர் இன மக்களின் ஆண் குழந்தை திருட்டு- போலீஸார் விசாரணை

நரிக்குறவர் இன மக்களின் ஆண் குழந்தை திருட்டு- போலீஸார் விசாரணை

30/Nov/2020 10:41:24

 ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையம் அருகில் சாலையோரம் தங்கிஉறங்கிக்கொண்டிருந்த நரிக்குறவர் இன மக்களின் இரண்டுவயது கில்லி என்ற ஆ ண் குழந்தையைஅடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்  கோபிசெட்டிபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தின் முன்புறம் உள்ள ஈரோடு–மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கீரிப்பள்ளம் ஓடையின் உயர்மட்டபாலத்தில் 20-க்கும் மேற்பட்டநரிகுறவர் இன மக்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இவர்கள் மொடச்சூர் சந்தைதிடலில் தங்கிருந்தபோது இங்கிருந்தவர்களுடன் கருத்து மோதல் ஏற்பட்டதால்  அங்கிருந்து இடம் பெயர்ந்து பேருந்துநிலையத்தில் தங்கினர்.

கொரோனாபொதுமுடக்கத்தினால் பேருந்துகள் இயங்காதவரையில்  தங்குவதற்கு இவர்களுக்குபிரச்சனை இல்லாமல் இருந்துவந்தது. தற்போது பொது முடக்கத்தளர்வுகளின் அடிப்படையில் பேருந்துகள் இயகத்தொடங்கியவுடன் பேருந்து நிலையத்திலிருந்த நரிகுறவர் இன மக்களை வெளியேற நகராட்சி நிர்வாகம் கட்டளையிட்டதால் தங்குவதற்கு வேறுவழியின்றி சாலையோர உயர்மட்டபாலத்தின் நடைபாதையில் தங்கியுள்ளனர்.

 இந்நிலையில், நரிகுறவர் இனத்தின் அம்மாசை திலகவதி தம்பதிகளின் இரண்டு வயதான மூன்றாவது மகன் கில்லி என்ற குழந்தை உட்பட மேலும் இரண்டு குழந்தைகளை நேற்று இரவு நடைபாதையில் தூங்கவைத்துவிட்டு அதன் பெற்றோர்கள் அருகில் உள்ள இரவுநேர தள்ளுவண்டி கடைக்கு சென்று இட்லி வாங்கி வந்துள்ளனர். இவர்கள் திரும்பிவந்துபார்த்தபோது கில்லிஎன்ற இரண்டுவயது குழந்தையை காணாததினால் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்து விட்டு அருகில் உள்ளபே ருந்துநிலையம் எஸ்.டி.என்.காலனி மற்றும் தொப்பக்குளம்  உட்பட பல பகுதிகளில் இரவு முழுவதும் தேடிஅலைந்துள்ளனர். 

 குழந்தைகிடைக்காமல் போகவே காலையில் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சாலை சிக்கனல் பெட்ரோல் பங்க் வணிககடைகள் உட்படஅந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி படக்காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 சாலையோர நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த நரிக்குறவர் இன மக்களின் இரண்டு வயது ஆண் குழந்தையைஅடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்ற அப்பகுதியில் பரபரப்புஏற்பட்டுள்ளது. குழந்தை திருடப்பட்டுள்ளதா  அல்லது கடத்தப்பட்டதா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Top