logo
 நவ.19, 20 -இல் புதுக்கோட்டையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: சுகாதாரத்துறைஅமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்  தகவல்.

நவ.19, 20 -இல் புதுக்கோட்டையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: சுகாதாரத்துறைஅமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்.

16/Nov/2020 10:55:58

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மதர்தெரசா பொறியியல், தொழில் நுட்ப கல்லூரியில் 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில்  (16.11.2020) அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தும் செய்யும் நோக்கத்துடன் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவில் உள்ள  மதர்தெரசா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் வருகிற 19.11.2020 (வியாழக்கிழமை) மற்றும் 20.11.2020 (வெள்ளிக்கிழமை) இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. 

மேலும் இம்முகாமில் சாம்சங், டி.வி.எஸ், ஐ.டி.சி போன்ற 75 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்தின் பணிபுரிவதற்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதன் பயனாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை சோ;ந்த படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்த கொண்டு வேலைவாய்ப்பை பெற வேண்டும். இதைபோன்று பொது சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 முன்னதாக ,புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மேட்டுச்சாலையில் உள்ள மதர் தெரசா பொறியியல் கல்லூரியில்  நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

Top