logo
குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் புகார் அளிக்கலாம்: ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தகவல்

குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் புகார் அளிக்கலாம்: ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தகவல்

10/May/2021 04:52:52

ஈரோடு, மே:குழந்தைகள் திருமணம் நடப்பது குறித்த தகவலை சைல்டு ஹெல்ப் லைனுக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் 18 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும் .வரும் 14-ஆம் தேதி அட்சய திருதியை முன்னிட்டு குழந்தைகளுக்கு திருமணம் நடத்த அதிகமான வாய்ப்பு உள்ளது .

இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தில் இருந்தும், மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தில் இருந்தும் வந்த உத்தரவின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் வசிக்கும் 18 வயது குறைவான பெண் குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கவிருக்கும் தகவல் தெரிந்தால் 1098 சைல்டு ஹெல்ப் லைன்சமூக நலத் துறையின் உதவி எண் 181 அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு உடனடியாக  தெரிவிக்க வேண்டும்.

Top