logo
சசிகலாவிடம் தொலைபேசியில் உரையாடும்  கட்சி நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க  வேண்டும்: புதுக்கோட்டை அதிமுகவில் தீர்மானம்

சசிகலாவிடம் தொலைபேசியில் உரையாடும் கட்சி நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்: புதுக்கோட்டை அதிமுகவில் தீர்மானம்

05/Jul/2021 11:32:41

புதுக்கோட்டை, ஜூலை:   புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகசெயலாளர், முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் திருபிகே.வைரமுத்து ஆகியோர் தலைமையில் 5.7.2021 ல் புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

 புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தலைமை கழக அறிவிப்பிற்கிணங்க கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களின் ஆலோசனைப்படி  புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட கழகம் சிறப்பாக செயல்படும்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தலில் (2021)  கட்சியின்  வெற்றிக்காக தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்ட கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிச்சாமி ,கழக ஒருங்கிணைப்பாளர், கழக பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் . பன்னீர் செல்வம் ஆகியோருக்கு  நன்றியிளை தெரிவிப்பது.

சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து 75 சட்டமன்ற உறுப்பினர் களை வெற்றிபெறச் செய்ததோடு, 234 தொகுதிகளில்  வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு  சசிகலா தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி விட்டேன் என்பதை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக செய்தி வெளியிட்டிருந்தார்.

கழகத்தில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலரிடம் பேசி வருகிறார். சசிகலாவிடம் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் கழக நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என தலைமையை கேட்டுக்கொள்கிறது. 


எதிர்வரும் உள்ளாட்சித்தேர்தலில் கழக ஒருங்கிணைப்பாளர் . பன்னீர் செல்வம்இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தலைமைக்கழகம் அறிவிக்கும் வேட்பாளர்களை  வெற்றிபெற செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில்  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Top