logo
தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஓய்வூதியர் சங்கம் ஆதரவு

தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஓய்வூதியர் சங்கம் ஆதரவு

10/Jan/2021 07:44:11

புதுக்கோட்டை, ஜன: விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக்கூட்டம் மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ம.வெள்ளைச்சாமி, பொருளாளர் இரா.முருகவேல் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். நிர்வாகிகள் இரா.சுப்பிரமணியன், அ.மணவாளன், கே.சதாசிவம் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 47 நாட்களாக தொடர்ந்து டில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, மத்திய அரசு விவசாயிகளோடு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். எரிவாயு சிலிண்டர் விலைஉயர்வை திரும்பப்பெற வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை திரும்ப வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.

தொகுத்துப்பெற்ற ஓய்வூதீயத்தை திரும்பப்பெறும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். சிறப்பு ஊதியம் பெறும்  சத்துணவு, அங்கான்வாடி, கிராம உதவியாளர் உள்ளிட்டோருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து நோய்களுக்கும் கட்டணமில்லா சிகிச்சையை அனைத்து அங்கீகராம் பெற்ற மருத்துவமனைகளிலும் சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Top