logo
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து சிபிஐ, சிபிஎம், விசிக சார்பில் சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து சிபிஐ, சிபிஎம், விசிக சார்பில் சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்

28/Jun/2021 02:32:14

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு  திங்கள்கிழமை(28-6-2021) காலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தார்.

 கோரிக்கைகள்:  கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து  வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி,  2014 முதல் உயர்த்தப்பட்ட கலால் வரிகளை பெருமளவு குறைத்து, விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு  மருத்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தை தடுத்து, நியாய விலையில்  மக்களுக்கு மருந்துகள்  தட்டுபாடின்றி கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ டெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும்தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, போதுமான  தடுப்பூசி மருந்துகளும், பேரிடர் கால நிவாரண நிதியும் வழங்க வேண்டும்.   அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

தொழில் முடக்கம், வேலையிழப்பு. வேலையின்மை மற்றும் வருமானத்திற்கு வழியில்லாத காரணங்களால் வாழ்வாதரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7500  வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும்.

மத்திய உணவுத் தொகுப்பில் இருந்து நபருக்கு தலா  10 கிலோ வீதம் உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் மா.நாகப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் கே.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்மு.பாரதி நன்றி கூறினார். எஸ்.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Top