logo
அமைச்சர் மெய்யநாதனை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்திய பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்

அமைச்சர் மெய்யநாதனை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்திய பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்

27/Jun/2021 08:23:45

புதுக்கோட்டை, ஜூன்:  புதுக்கோட்டை மாவட்ட  பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அமைச்சர் மெய்யநாதன் அவர்களை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (27-6-2021) காலை  7 மணியளவில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை  மனு அளித்தனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரில்  அழைத்து மனுவை பெற்றுக்கொண்ட  அமைச்சர் மெய்யநாதன். நிர்வாகிகளிடம்  பேசியபோது எத்தனை ஆயிரம் பேர் பணியில் இருக்கிறீர்கள்  என்ற விவரத்தை கேட்டறிந்தார்.

அப்போது சுமார் 12 ஆயிரம்  பேர் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக முதல்வர்  உரிய நேரத்தில் முடிவு செய்வார் என  அமைச்சர்  தெரிவித்தார்.

கொரோனா மற்றும் நிதி நெருக்கடி காரணமாக தாமதம் ஆவதாகவும், எனினும்  பகுதிநேர ஆசிரியர்களை பணி  நிரந்தரம் செய்ய தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் நம்பிக்கை  தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி வசூல் செய்து வருவதாகவும் அந்த நிதியை  முதல்வரிடம் நேரில் அளிக்க  விரும்புவதாகவும் நிர்வாகிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.அதற்கு  நிதி வசூல்  செய்து முடித்ததும் தகவல் அளித்தால், அதனை சங்க நிர்வாகிகள்  நேரடியாகவோ அல்லது தன் மூலமாகவோ  முதலமைச்சரிடம்  வழங்க  ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

பகுதிநேர உடற்கல்வி ஆசிரியரின்  வெங்கடேஷ்வரன், பகுதிநேர ஆசிரியர் காமராஜ் ஆகியோரது முயற்சியில் அமைச்சருடனான சந்திப்பு நடந்தது. இந்நிகழ்வில், பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்  அருளப்பன், செல்வகுமார், பாலகிருஷ்ணன், சுவாமிநாதன், பாண்டியராஜன், சரவணன், பூவயற்கரசி, கலையரசி, கவுசல்யா, சுதா ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

 

Top