logo
சிவகங்கையில் கல்வித்துறை சார்பில் ரூ.1கோடி மதிப்பில் கூட்ட அரங்கம்: அமைச்சர் பெரியகருப்பன்  திறப்பு

சிவகங்கையில் கல்வித்துறை சார்பில் ரூ.1கோடி மதிப்பில் கூட்ட அரங்கம்: அமைச்சர் பெரியகருப்பன் திறப்பு

28/Jun/2021 06:56:25

சிவகங்கை, ஜூன்: சிவகங்கை மாவட்ட கல்வித்துறை சார்பில் சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் ரூ.1 கோடி மதிப்பில் தேர்வுக்கூட அரங்கத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திங்கள்கிழமை (28.06.2021) திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள  மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளிவளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் (புதுக்கோட்டையில் அமைந்துள்ள தேர்வு கூடம் போன்ற) ஒரு  பெரிய கூட்ட அரங்கம் (Meeting Hall) கட்டப்பட்டது. இதை.தமிழகம ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  சாமி சத்தியமூர்த்தி  தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலராக  பணியாற்றிய காலத்தில் அதற்கான முன்னெடுப்புகளை செய்ததைப்  பாராட்டி  இந்த  விழாவில் நினைவு பரிசு வழங்கி  கௌரவிக்கப்பட்டார் .விழாவில்  மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிசிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர்  லதா, சிவகங்கை  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  .பாலமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Top