logo
 ஊரடங்கு காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களிடம் கடன் தொகை செலுத்த நெருக்கடி கொடுத்தால் நடவடிக்கை: கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஊரடங்கு காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களிடம் கடன் தொகை செலுத்த நெருக்கடி கொடுத்தால் நடவடிக்கை: கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

25/Jun/2021 11:40:28

கரூர், ஜூன்: கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்குகாலத்தில் மகளிர் சுயடக் குழுக்களிடம் கடன் தொகையை திரும்ப செலுத்த நிர்பந்தம் செய்தல், கூடுதல் வட்டி வசூல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் வங்கிகள்  மற்றும் நுண் நிதி கடன் நிறுவனங்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்   தனியார் வங்கிகள்  மற்றும் நுண் நிதி கடன் நிறுவனங்களுடனான  ஆலோசனைக்கூட்டம்   மாவட்ட ஆட்சியர்  .பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியர்  பேசியதாவது:   உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பலவேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகனை எடுத்து வருகினறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கரூர் மாவட்டத்தில் உள்ள தனியா வங்கிகள் மற்றும் நுண்நிதிகடன் வழங்கும் நிறுவனங்கள்  மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய  கடன்  தவணைத் தொகையை  திரும்ப செலுத்தக் கேட்டு நிர்பந்தம் செய்யக்கூடாது.

கரூர் மவட்டத்தில் தவணைத்தொகை செலுத்த கட்டாயப்படுத்தாமல் கால அவகாசம் அளிக்கவேண்டும். அந்த நிலுவைத்தொகைகளுக்கு கூடுதல் வட்டி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.  நிதிநிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  பத்திரிகைகளிலும் செய்கி வெளியிடப்பட்டுள்ளது

இருப்பினும், கரூர்  நகராட்சி, சின்னான்டாங்கோவில்  பசுபதி லேஅவுட் பகுதியைச்  சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுவிடம் கடன்  தவணைத் தொகையை கேட்டு ஆசிர்வாதம் என்ற நுண்கடன் நிதி நிறுவனம்  நிர்ப்பந்திப்பதாக புகார் வரப்பெற்றுள்ளது

இனிவரும் காலங்களில்  முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன்  தொகை செலுத்த கால அவகாசம் அளிக்கப்படவேண்டும். கூடுதல் வட்டி தொகை வசூலிப்பதையும் தவிர்க்க வேண்டும். இதைய மீறி கடன் தொகையை வசூல்  செய்யும் நிறுவனங்கள் மீது எவ்வித பாரபட்சம் பார்க்காமல் கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்

உதவிக்குழுக்களிடம் அதிக வட்டி கேட்பது தவணை தொகை கேட்டு நிர்பந்திப்பது தொடர்பான புகார்களுக்கு மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தை 04324- 257377 என்ற எண்ணில் தொடர்பு கொண்டுபுகார் அளிக்கலாம் என்றார் ஆட்சியர்.  இக்கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வாணிஈஸ்வரி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Top