logo
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமல்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமல்

10/Apr/2021 08:01:04

ஈரோடு, ஏப்: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் சனிக்கிழமை அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி யுள்ளது.நேற்று புதிய உச்சமாக 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று மட்டும் 70 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதனை கட்டுப்படுத்த அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10  முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி,   ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகளில் இறைச்சிகளை பாக்கெட் செய்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.தேநீர் கடைகளில் ஒரு முறை உபயோகிக்கும் பேப்பர் கப் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 50 சதவீதம் இருக்கைக்கு மட்டும் அனுமதி இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துள்ளன. 

கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டுள் ளது.இதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் வட்டங்களும் போடப்பட்டு வருகிறது. பெரிய பெரிய ஜவுளி நிறுவனங்கள் ஷாப்பிங் மால்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்க அனுமதிக்கப்பட்டது. நுழைவாயில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 


பேருந்துகளில்  நின்று செல்ல அனுமதி இல்லை. பேருந்துகளில்  கொரோனா தடுப்பு  முறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க அந்தந்த பணிமனைகளில் உள்ள மேலாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரனோ தடுப்பூசி போட 50 நபர்களுக்கு மேல் பதிவு செய்தால் அவர்களின் இடத்திற்கே வந்து மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கொரனோ விதிகளை மீறினால் முதல் முறை அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை கடை சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களுக்கு வந்து செல்பவர்களின் செல்போன் எண், பெயர் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு வ உ சி பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி பெரிய மார்க்கெட்டில் இன்று முதல் மொத்த விற்பனை காலை 6 மணிக்குள் முடித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நுழைவாயில் கிருமி நாசினி, உடல் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் வகையில் கர்மன் ஸ்கேனர் மூலம் சோதனை செய்வது, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்து வது சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  

அம்மா உணவகங்களில்  ஞாயிற்றுக்கிழமை முதல் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. இது போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

Top