logo
கரூரில் பெண்கள் குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிரான  உதவி மையம் தொடக்கம்

கரூரில் பெண்கள் குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிரான உதவி மையம் தொடக்கம்

25/Jun/2021 07:16:25

கரூர், ஜூன்: கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிரான பெண்கள் உதவி மையம் உதவி தொலைபேசி எண் 181, 112  தொடக்க விழா  ( 25.6.202) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 கரூர் மாவட்ட   காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் முன்னிலையில் நடைபெற்ற  நிகழ்வில்  , சென்னை  சீருடை பணியாளர் தேர்வு மைய கூடுதல் காவல்துறை இயக்குநர், சீமா அகர்வால், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.  பாலகிருஷ்ணன்  திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் ராதிகா   ஆகியோர் காணொலி  மூலம் கொண் டனர். இதில் கரூர் மற்றும் திருச்சி  சரக காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், பெண் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில், கரூர்  மாவட்டத்தில் உள்ள 17 காவல் நிலையங்களில் இருந்து கலந்து கொண்ட 14 பெண் காவல் ஆளினர்களுக்கு One Stop Centre Coordinator ரம்யா,  மாவட்ட திட்ட அலுவ லர் வாணஸ்ரீ  வாழ்வியல் பிரச்னைகள் என்ற தலைப்பிலும் , கரூர்  மாவட்ட  தொழிலாளர் நலத்துறை ஆணையர்  கிருஷ்ணவேணி   Women and Labour Issues  என்ற தலைப்பிலும்,   மாவட்ட சமூக நல மற்றும் பாதுகாப்பு அலுவலர் பார்வதி Shelter Homes & Counseling Service தலைப்பிலும் , கரூர் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சவி பாதிக்கப்பட்டவர்களை எப்படி கையாள்வது என்ற தலைப்பிலும் பயிற்சிய ளித்தனர்.




இது குறித்து, கரூர் மாவட்ட   காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் கூறியதாவது:   சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமைகள், பொது இடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், பணிபுரியும் இடத் தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள், சமூக வலைதளங்கள் மூலம் சந்திக்கும் பிரச்னைகள், மருத்துவ உதவி தேவைப்படும் பெண்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சட்டப் படியாக உதவி செய் வதற்கு  அரசு உத்தரவுபடி  Women help Desk என்ற பிரிவின்படி பெண் காவலர்களை யே கொண்டு மேற்கண்ட பிரச்னைகளை தீர்வு காண்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றார்.

Top