logo
திருவரங்குளம் ஒன்றியத்தில் பள்ளி சத்துணவு திட்ட மாணவர்களுக்கு உலர் உணவுபொருள்கள் வழங்கல்

திருவரங்குளம் ஒன்றியத்தில் பள்ளி சத்துணவு திட்ட மாணவர்களுக்கு உலர் உணவுபொருள்கள் வழங்கல்

21/Jun/2021 05:53:34

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளில் பயிலும் சத்துணவு திட்ட மாணவர்களுக்கு அரசின் சார்பில் உலர் உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

திருவரங்குளம் ஊராட்சி  ஒன்றிய குழுத்தலைவர்  வள்ளியம்மை தங்கமணி  தலைமையில்  வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளத்திவிடுதி ,பாத்தம்பட்டி, தெற்கு பாத்தம்பட்டி, மேலகரும்பிரான்கோட்டை ஆகிய  ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உலர் உணவு பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

Top