logo
சிட்டியூனியன் வங்கி சார்பில் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கல்

சிட்டியூனியன் வங்கி சார்பில் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கல்

03/Jun/2021 10:33:04

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதிக்குள்பட்ட அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு சிட்டியூனியன் வங்கி சார்பில் 3 ஆக்சிஜன் செரிவூட்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதாரத்தறை முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர்பங்கேற்று பாதுகாப்பு உபகரணங்கள் உணவு பொருள்களை வழங்கினார். இதில்,  சுகாதாரத்துறை இணை இயக்குனர், வங்கி அதிகாரிகள், மருத்துவர்கள் செவிலியர்கள்.

அதிமுக நகர செயலாளர்  அப்துல் அலி மற்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. ஆர். தர்மராஜன் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எம். மீராமைதீன், நகர நிர்வாகி  என்.ஏ. அப்துல் ரகுமான் ஆகியோர் பங்கேற்றனர்

Top