logo
 அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்வோருக்கு தனி பயணச்சீட்டு அறிமுகம்

அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்வோருக்கு தனி பயணச்சீட்டு அறிமுகம்

20/Jun/2021 11:40:12

தமிழக அரசால் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்வோருக்கு தனி பயணச்சீட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் (நகர பேருந்து) மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும்நகர பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.

இதையடுத்து, கடந்த 7.5.2021 -இல் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டது.

இதன்மூலம் ஆண்டுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள சுமார் ரூ.1,200 கோடி இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு, இழப்பு தொகையை அரசு போக்குவரத்து கழகங் களுக்கு மானிய வழங்கவும் அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், இலவச பயணச்சலுகை பெற்றுள்ள  4 பிரிவு  பயனாளிகளுக்கு தனித்தனி வண்ணத்தில் பயணச்சீட்டு வழங்குவதென அரசு முடிவு செய்து போக்குவரத்துக்கழகங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Top