logo
 நிவாரணத் தொகை பெற்ற ஏழை பாட்டியின் அந்த அழகான சிரிப்பை படம் பிடித்த புகைப்படக் கலைஞருக்கு முதலமைச்சர் பாராட்டு

நிவாரணத் தொகை பெற்ற ஏழை பாட்டியின் அந்த அழகான சிரிப்பை படம் பிடித்த புகைப்படக் கலைஞருக்கு முதலமைச்சர் பாராட்டு

25/Jun/2021 02:30:02

சென்னை, ஜூன்:   தமிழகம் முழுவதும்  அரசால் கடந்த  15.6.2021-இல்  வழங்கப்பட்ட  கொரோனா நிதியைப் பெற்ற மகிழ்ச்சியை இயல்பாக வெளிப்படுத்திய மூதாட்டியின் புகைப்படம் சமூக வலை தங்களில் வைரலாகியது.

நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த ஜாக்சன் ஹெர்பி என்ற  புகைப்படக்கலைஞர் அந்த பாட்டியிடம் இந்த பணத்தை என்ன செய்யப் போறீங்க  என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த பாட்டி இந்த பணத்தை வைத்து நல்லதாக சேலையும் தேவையான பொருட்களும் வாங்க போகிறேன் என்று மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார். பின்னர் சமூக வலை தளங்கலில் வெளியான  பாட்டியின் புகைப்பட  வைரலானது.

அதன்பின், புகைப்படகலைஞர் ஜாக்சனுக்கு   தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5000  நிவாரணத் தொகை கிடைத்திருக்கிறது. அதிலிருந்து ரூ.2000 தொகையை அந்த பாட்டியைத் தேடி அவரின் வீட்டிற்கு சென்று கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஜாக்சன் ஹெர்பி .

இந்நிலையில். ஏழைப்பாட்டியின் அந்த அழகான சிரிப்பை படம்பிடித்த புகைப்படக்கலைஞர் ஜாக்சன் ஹெர்பியை முதல்வர் நேரில் அழைத்து வெள்ளிக்கிழமை (25.6.2021) பாராட்டினார்.

Top