logo
கீழ்பவானி கால்வாயில்  கான்கீரிட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

12/Feb/2021 08:17:08

ஈரோடு பிப் : ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை 124 மைல் தூரம் செல்லும் கீழ்பவானி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த கால்வாய் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர்  விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது இந்த கால்வாயில் 940 கோடி மதீப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது. தமிழக அரசின் இந்த கான்கிரீட் அமைக்கும் திட்டத்தால் விவசாய விளைநிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தின் போது கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் அமைத்தால் நிலத்தடி நீர் முழுமையாக பதிக்கும் என்றும் தமிழக அரசு கான்கீரிட் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு , கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Top