logo
நவ.26- பொது வேலை நிறுத்தத்தை விளக்கி ஏஐடிசியு சங்கத்தினர் துண்டறிக்கை விநியோகம்

நவ.26- பொது வேலை நிறுத்தத்தை விளக்கி ஏஐடிசியு சங்கத்தினர் துண்டறிக்கை விநியோகம்

22/Nov/2020 01:55:28

புதுக்கோட்டை: மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் திருத்தச் சட்டங்கள் மூன்றையும்  தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் நான்கையும் ரத்து செய்யவேண்டும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

புதிய மின் வரைவு 2020 மசோதாவை கைவிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26 -இல் நடைபெற இருக்கிற அகில இந்திய பொது வேலைநிறுத்தம் அனைத்து சங்க பொது வேலை நிறுத்தம் மறியல் போராட்டத்தை விளக்கி அதற்குரிய துண்டறிக்கைகளை அன்னவாசல் பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

 இந்த பிரசார இயக்கத்தை ஏஐடியூசி மாவட்ட தலைவர் கே. ஆர். தர்மராஜன் தொடங்கி வைத்தார் இதில், சிஐடியு தலைவர்கள்தேவராஜன், எம் ஜோசி, சோலையன், ஏஐடியுசி நிர்வாகிகள் எம் மீரா மைதீன், உள்ளாட்சி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி எஸ் கனகராஜ், பொருளாளர் க. செல்வராஜ் ,அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி பாண்டியராஜன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கே கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நா விஜயரங்கன், ஆனந்தன், ஜாபர் அலி, ஜீவானந்தம், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top