logo
கீரமங்கலத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகள், பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்.

கீரமங்கலத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகள், பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்.

20/Feb/2021 07:43:54

கீரமங்கலம்: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் களப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் விவசாயிகள், பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் களப்பயிற்சிக்காக வந்துள்ளனர். களப்பயிற்சியாக விவசாயிகளின் தோட்டங்களுக்குச் சென்று மலர்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யப்படும் தோட்டங்களில் ஆய்வு செய்த மாணவிகள் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் விவசாயம் செய்வது குறித்து கேட்டறிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமையில் விவசாயிகள், மாணவிகளுடன் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடினார்கள். அப்போது பள்ளி மாணவிகள் பலரும் விவசாயம் காக்க வேளாண்மை படிப்புகளை படிக்க ஆர்வமாக உள்ளதாக கூறினார்கள். மேலும் மாணவிகள் பயிற்சி காலம் முடிந்து போகும் முன்பு ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து குருங்காடு அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதுடன் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் விதைப்பந்துகள் மற்றும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கினார்கள். விழாவில் விவசாயிகள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். செய்தி : மகிழினி.

Top