logo
தமிழக அரசின் சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்:ஆட்சியர் கவிதாராமு தகவல்

தமிழக அரசின் சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்:ஆட்சியர் கவிதாராமு தகவல்

22/Jun/2021 06:42:29

புதுக்கோட்டை, ஜூன்: சுதந்திர தின விழாவின்போது  முதல்வரால்  வழங்கப்படும் சமூக சேவகர் விருது பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட் டத்தில் பெண்களுக்கு சிறப்பாக சேவை புரிந்த நிறுவனத்துக்கும், சமூக சேவர்க ளுக்கும் 2021-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்க ளால் விருது வழங்குவதற்கு கீழ்க்காணும் விதிமுறைகளின்படி தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண்குலத்திற்கு பெரு மை சேர்க்கும்; வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற் றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக சேவை நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். இணைப்பு படிவம் தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலம் (Arial) Font Size – 12 என்ற அளவில் தட்டச்சு செய்து முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் 1 பக்க அளவில் தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலத்தில் (Arial)  தட்டச்சு செய்து   (Soft Copy and Hard Copy) அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet) -4  , (தமிழ் 2 மற்றும் ஆங்கிலம் 2) மற்றும்  Passport Size Photo உடன் விண்ணப்பிக்க வேண்டும். மேற்குறிப் பிட்டுள்ள விதிமுறைகளின்படி உரியமுறையில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படும்.

விண்ணப்ப படிவங்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளவும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25.6.2021 மாலை 5 மணி. மேலும் விவரங்களுக்கு 04322-222270 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  


Top