logo
கரூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தனியார் தொண்டு நிறுவனம் கொரோனா நிவாரண உதவி அளிப்பு

கரூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தனியார் தொண்டு நிறுவனம் கொரோனா நிவாரண உதவி அளிப்பு

23/Jun/2021 12:23:54

கரூர், ஜூன்: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தனியார் தொண்டு நிறுவனத்தினர் நலிவுற்ற மக்களுக்கு  நலத்திட்ட உதவிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

இது தொடர்பாக கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்:

தமிழக அரசு கடந்த 10/5/2021  கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அறிவித்துள்ளதை யொட்டி  ஏழை எளிய மக்கள் அன்றாட வேலை மற்றும் தொழில்களை இழந்து சிரமத்தில் இருந்து வருவதை கவனத்தில் கொண்டு   AREDS தொண்டு நிறுவனம் சுமார் ரூ.1500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்களை  3 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக செவ்வாய்(22.6.2021)கிழமை  கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்   30 ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருள்களை  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதியுமான சி. மோகன்ராம் அவர்கள்    வழங்கினார்.

இதில்AREDS தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Top