logo
தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு: ஈரோடு மாவட்டத்தில்  242 மாணவர்கள்  தேர்ச்சி

தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 242 மாணவர்கள் தேர்ச்சி

20/Jun/2021 02:09:38

ஈரோடு, ஜூன்:  தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு: ஈரோடு மாவட்டத்தில்  242 மாணவர்கள்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு(என்.எம்.எம்.எஸ்) எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு  மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை பிளஸ் 2 படிப்பு முடியும் வரை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் நடப்பாண்டுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நடந்தது. இதில், ஈரோடு மாவட்டத்தில் என்.எம்.எம்.எஸ்., தேர்வு 37 மையங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நடத்தப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை  வெளியானது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுதிய 3,770பேரில் 242 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டம், பெருந்துறைவீரணம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் என்.எம்.எம்.எஸ்., தேர்வு எழுதிய 24 மாணவ-மாணவிகள் 18 பேர் தேர்ச்சி பெற்று, மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 8-ஆவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேசிய வருவாய்(NMMS) வழி திறனறித் தேர்வு எழுதுவதன் மூலம் 9 -ம் வகுப்பு படிக்கும்போது நடைபெறும் கிராமப்புற மாணவர்களுக்கான திறனறித் தேர்வு மற்றும் 1 ம்வகுப்பு படிக்கும் போது நடைபெறும் NTSE தேர்விலும் வெற்றி பெற்று உதவித்தொகை பெற இதுவழிகாட்டியாக அமையும். மேலும் பணியாளர் தேர்வு ஆணையத் தேர்வு (SSC) மற்றும் வங்கிப் பணியாளர்தேர்வு எழுத மாணவர்களுக்கு இது வழிகாட்டியாக அமையும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

                                                  

        

Top