22/Jun/2021 01:24:29
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ மற்றும் கார் வேன் ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாவட்ட ஏஐடியூசி தலைவர் கே .ஆர். தர்மராஜன் தொடங்கி வைத்தார்.
கோரிக்கைகள்: ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் விலையை உழைத்திட வேண்டும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு தனியாருக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். இஎம்ஐ வங்கி கடன் தனியார் கடன் செலுத்துவதற்கு டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.
அதைப்போல எப். சி பர்மிட் ஆர்டிஓ சான்றிதழுக்கு டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ மற்றும் கார் வேன் ஓட்டுனர்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்