logo
வரலாற்று சிறப்பு மிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு வருகின்ற  21-ஆம் தேதி  முதல்வர் அடிக்கல்:

வரலாற்று சிறப்பு மிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு வருகின்ற 21-ஆம் தேதி முதல்வர் அடிக்கல்:

17/Feb/2021 09:31:56

புதுக்கோட்டை, பிப்: வரலாற்று சிறப்பு மிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்ட தொடக்க விழாவுக்கு பிப்.21-இல் வருகை தரும் தமிழக முதல்வருக்கு விவசாயிகள், பொதுமக்கள் 1 லட்சம் பேர்  வரவேற்பளிக்கவுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூறாண்டு கால கனவான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில்  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகின்ற 21.02.2021 ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்கள். 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டுகால கோக்கையுமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டமாகும். இத்திட்டத்தை நிறைவேற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், செழிப்பான மாவட்டமாக மாற்றவும் இத்திட்டம் குறித்து தொடர்ந்து முதல்வரிடம் வலியுறுத்தி பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

 இதன் பயனாக இத்திட்டத்திற்கு ஏற்கெனவே ரூ.14,000 கோடி திட்டமதிப்பீடு செய்து பட்ஜெட்டில் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலமெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று  இதற்கான பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்படி இத்திட்டத்திற்கான டெண்டர் பணிகள் முடிக்கப்பட்டு வருகின்ற 21.02.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூரில்  வரலாற்று சிறப்பு மிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை  நேரடியாக   முதலமைச்சர்  வருகை தந்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்ள். இதனால் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் இவ்விழாவிற்கு வருகை தரும் முதல்வரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 1 லட்சம் பேர் வரவேற்பு அளிக்க உள்ளனர். இந்த விழாவில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். 

Top